பிரதமர் மோடி சென்னை வருகை..,

சென்னை மாவட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று மதுரையில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் அரசு விழா நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம்,மற்றும்கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகையில் இரவு தங்கினார்.

Source :arasiyaltoday

Share