துறையூரில் பயிர் கடன் பிரச்னையால் நகை கிடைக்காமல் விவசாயி மன வேதனையில் வங்கி முன் விவசாயிகளுடன் தர்ணா போராட்டம்..

மனைவியின் 6 சவரன் நகையை மீட்டுத்தர அரசுக்கு கோரிக்கை.. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜன் 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார், கடந்த ஓராண்டுக்கு முன்பாக ஆர் 1586 கோட்டப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.5 லட்சம் பயிர் கடன் பெற்றுள்ளார், மீண்டும் விவசாய செலவுக்காக மனைவியின் 6 சவரன் நகையை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்துள்ளார், தற்போது திருமண நிகழ்ச்சிக்காக நகையை மீட்க பைனான்சில் பணம் […]

Continue Reading

சமயபுரம் அருகே பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறல் புகார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

  திருச்சி: சமயபுரம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பாதிரியாருமான ஜெயராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடைப் பகுதியில் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தனது தோழியுடன் வேன் […]

Continue Reading

துறையூரில் காரில் கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சா பறிமுதல்

செய்தியாளர் :அருண் 90959 25936 திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் ரூ.30 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, மதுரையைச் சேர்ந்த 30 வயது வாலிபரை கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் துறையூர்–பெரம்பலூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

Continue Reading

திருச்சி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வளாக நேர்காணல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், கொணலை கிராமத்தில் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் (Campus Interview) நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் வளாக நேர்காணல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை Besant Technologies நிறுவனத்தின் சார்பில் இந்த வளாக நேர்காணல் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, […]

Continue Reading

துறையூரில் இருந்து சமயபுரத்திற்கு புதிய பேருந்து சேவை – துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார்

  துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து புலிவலம், மணச்சநல்லூர் வழியாக சமயபுரம் செல்லும் புதிய அரசு பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார். துறையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. விழாவில் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் கொடியசைத்து தொடங்கி […]

Continue Reading

கீரம்பூர் ஏரி உபரி நீரால் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு – பாலம் அமைக்கக் கோரி மனு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கீரம்பூர் பகுதியில் உள்ள ஏரி, மழைக்காலங்களில் நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது, சூரமாரி ஆற்றுப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கீரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொடர்ந்து பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரி நீர் செல்லும் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் […]

Continue Reading

துறையூர் அருகே விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி போராட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்பாட்டம். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் ஆவின் பால் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இப்பகுதியைச் சேர்ந்த மாடு வளர்ப்போரிடமிருந்து தினமும் சுமார் 10,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாகவே லிட்டருக்கு பால் 30 முதல் 36 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை தங்களுக்கு கட்டுபடி ஆகவில்லை என மாடு வளர்க்கும் […]

Continue Reading

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் பொது வாழ்க்கையை விட்டு விலகுவேன்” – துணை சபாநாயகர் ரவிசங்கர்- உதயநிதி – வீடியோ

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை சபாநாயகர் ரவிசங்கர், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியதுடன், அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என சவால் விடுத்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், “இனி வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகம் […]

Continue Reading

நாகப்பட்டினத்தில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

நாகப்பட்டினம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில், சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் உத்தரவின்படியும், சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா அறிவுரையின்படியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K.K. பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை […]

Continue Reading

திருச்சி பொறியியல் கல்லூரியில் 80-ஆவது சுதந்திர தின விழா

  திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்த கொணலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கல்லூரி வளாகம் தேசியக் கொடி மற்றும் தேசப்பற்று உணர்வை ஏற்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் தலைவர் முனைவர் சுஜாதா சுப்ரமணியம் முன்னிலை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை […]

Continue Reading