
தலைப்பு:
பணியில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமனுக்கு காவல்துறை மரியாதை
செய்தியாளர்: ஜீவா
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன், பணியின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சிக்கி கடந்த 14.04.2026 அன்று உயிரிழந்தார்.
மறைந்த ஜெயராமனின் உடலுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் முழு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், 21 குண்டுகள் முழங்க காவல் மரியாதையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், மறைந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும், பல்வேறு நிலை காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பணியில் இருந்தபோதே உயிரிழந்த ஜெயராமனின் மறைவு காவல்துறையினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

