
துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து புலிவலம், மணச்சநல்லூர் வழியாக சமயபுரம் செல்லும் புதிய அரசு பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.
துறையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
விழாவில் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பேருந்து துறையூரில் இருந்து புறப்பட்டு புலிவலம், மணச்சநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சமயபுரத்தை சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் பயன்பெற உள்ளனர்.
குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் மணச்சநல்லூர், புலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து துறையூர் மற்றும் சமயபுரம் பகுதிகளுக்கு தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய பேருந்து சேவை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல மேலாளர் (தொழில்நுட்பம்) பூபதி, துணை மேலாளர் ஜெயச்சந்திரன், கண்காணிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளர் B. மதன், துறையூர் தெற்கு நகரச் செயலாளர் K. வினோத்குமார், துறையூர் வடக்கு நகரச் செயலாளர் M. சூர்யா, துறையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் M. தர்மா, துறையூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், துறையூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சுதாகர், துறையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தமிழக வெற்றி தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் செந்தில்குமார், தேனூர் மணிகண்டன், அன்பழகன், மகேந்திரன், முத்துக்குமார், உதயக்குமார், விஜயகுமார் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
<b> Total Views: 145 </b>

