வைகாசி பௌர்ணமி விழா: பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

செய்தியாளர்  : சுபாஷ் செல்வம் பெரம்பலூர், மே 31: பெரம்பலூர் நகரின் சங்குபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மாலை அணிவித்து சிறப்பு […]

Continue Reading

வேளாங்கண்ணியில் அமைச்சர் மரிய வில்சன் வழிபாடு: தமிழக நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை

செய்தியாளர்:விஜய் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் நேற்று வருகை தந்தார். அப்போது பேராலயத்தில் முழங்கால் இட்டு பிரார்த்தனை செய்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபாட்டில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன் கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு மிகவும் விசேஷமானதாகும். விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட […]

Continue Reading

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு தங்க கிரீடம் சூட்டும் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்தியாளர்: விஜய்    வேளாங்கண்ணி, மே 30: புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆரோக்கிய அன்னைக்கு தங்க கிரீடம் சூட்டும் சிறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் “லூர்து நகர்” என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் “பசிலிக்கா” என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள இந்த பேராலயம் வங்கக் […]

Continue Reading

விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழைவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாந்தா (42). இவரது கணவர் சக்திவேல் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விவசாய நிலத்தில் பயன்படுத்த வைத்திருந்த பூச்சிமருந்தை சாந்தா குடித்துள்ளார். பின்னர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Continue Reading

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட மகனின் உடலை மீட்டுத்தர கோரி பெற்றோர் மனு

செய்தியாளர்: விஜய்  நாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடி அருகே உள்ள ப.புளியக்குடியைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன், தனது உறவினர்களுடன் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- “எனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது முதல் மகன் பார்த்தசாரதி (27), இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு வேலைக்காக மலேசியா சென்றார். அங்கு அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் […]

Continue Reading

வேளாங்கண்ணி பேராலயத்தில் சர்ச்சை ஏற்படுத்திய வாசிப்பு தவறு… அதிபர் விளக்கம்

        செய்தியாளர் : விஜய்   வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் சிறுவன் வாசித்த மன்றாட்டில் ஏற்பட்ட தவறுக்கு பேராலய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி மாலை குடந்தை ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற திருப்பலியின் போது, நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு வாசிப்பில் […]

Continue Reading

பக்ரீத் பண்டிகை : நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை

    செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் தியாக திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு செம்மறி ஆடு மற்றும் மாடுகளை குர்பானியாக வழங்குவது வழக்கமாக உள்ளது. இதுபோல நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள […]

Continue Reading

வாகன சோதனையில் 2 பேர் கைது: புகையிலை பொருட்கள், மொபட் பறிமுதல்!

  செய்தியாளர்: ஜேசுராஜ் விக்கிரமங்கலம், மே 28: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புகையிலை பொருட்களை கடத்தி வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த மொபட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் இன்று விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ‘வி. கைகாட்டி’ பகுதியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வந்த […]

Continue Reading

விலை அதிகம் : ஆக்ஷன் அதிகம்! துறையூரில் துணை சபாநாயகரின் அதிரடி ஆட்டம்

திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான மனமகிழ் மன்றத்தில், விதிமுறைகள் மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கடைகள் திறக்கப்படாத நிலையில், துறையூர் பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழக அரசு 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபான பாட்டில்கள் விற்பனை […]

Continue Reading

பள்ளி வாகனங்கள் ‘பிட்’டாக இருக்கிறதா? துறையூரில் சார்-ஆட்சியர் அதிரடி ஆய்வு!

திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன அலுவலகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை முசிறி சார்-ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் பாபு முன்னிலையில் நடத்தினர். ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டகம், தீயணைப்பு கருவி, அவசர வெளியேறும் கதவு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் முறையாக செயல்படுகிறதா என பரிசோதிக்கப்பட்டது. மேலும், […]

Continue Reading