அரியலூரில் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரி முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

  அரியலூர்: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரை நிரந்தரப்படுத்தக் கோரி, தமிழ்நாடு ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதாரத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், அரியலூர் திருச்சி சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம் மூலம் முதலமைச்சரின் முகவரிக்கு 90 அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன. அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 300-க்கும் […]

Continue Reading

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியில் மீண்டும் துரோகம்

காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க.தர்மராஜன் குற்றச்சாட்டு தூத்தூர்: கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பில் தமிழக அரசு 3-வது முறையாகவும் குளறுபடியான அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளதாக காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க.தர்மராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக வெற்றி கழக தலைவர் தஞ்சை டெல்டா பகுதியில் விவசாயிகளின் அடையாளமான பச்சை […]

Continue Reading

உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் சந்திப்பு நடைபயணம்

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பிரசாரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரை இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட உடையார்பாளையம் நகரில் மக்கள் சந்திப்பு நடைபயணம் நடைபெற்றது. இதையொட்டி, உடையார்பாளையம் கடைவீதியில் இருந்து தொடங்கிய நடைபயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாகவும், […]

Continue Reading

அரியலூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சிபிஐ கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரசாரம்

அரியலூர், ஆக.11: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, அரியலூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நடைபயண மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றிய குழு சார்பில் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் கே.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட […]

Continue Reading

அரியலூரில் பெண் தொழில் முனைவோருக்கு ‘சாதனையாளர் 2026’ விருது

அரியலூர்: அரியலூர் மாவட்ட பெண்கள் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் ‘ஸ்டார் எக்ஸ்போ 2026’ கண்காட்சி டி.டி.வி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் தொழில் முனைவோர் பங்கேற்று தங்களது தயாரிப்புகளுக்கான விற்பனை அரங்குகளை அமைத்திருந்தனர். பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் யோகா மற்றும் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் ‘மகளிர் தொழில் முனைவோர் சாதனையாளர் 2026’ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் […]

Continue Reading

விக்கிரமங்கலம் அருகே தகராறில் இருவரை தாக்கிய 4 பேர் கைது

அரியலூர், ஜூலை 26: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழ கோவிந்தபுத்தூரில் ஏற்பட்ட தகராறில் இருவரை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ கோவிந்தபுத்தூரைச் சேர்ந்த மதியழகனின் மகன் சுரேஷ்குமார் (26), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, அவரது கடைக்கு எதிரே அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவருடன் அறிவொளி (21) வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சுரேஷ்குமாரின் தம்பி தினேஷ்குமார், “ஏன் […]

Continue Reading

காசோலை மோசடி வழக்கில் குற்றவாளிக்கு ஓராண்டு சிறை

  செய்தியாளர் : சுபாஷ் செல்வம்   அரியலூரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா தொடர்ந்த காசோலை மோசடி வழக்கில், தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் குற்றவாளி என அரியலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்–I தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் விவரப்படி, தனது தொழில் அபிவிருத்திக்காக முகமது ரியாஸ், ஷேக் அப்துல்லாவிடம் ரூ.3 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட காசோலை, அரியலூரில் உள்ள வங்கியில் வசூலுக்காக சமர்ப்பிக்கப்பட்டபோது “Payment Stopped […]

Continue Reading

“போதை ஒழிப்பு – சாலை பாதுகாப்பு: மாணவர்களுக்கு விக்கிரமங்கலம் போலீசார் விழிப்புணர்வு!”

விக்கிரமங்கலம், ஜூன் 25: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் சிறுவயதிலேயே புகையிலை மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் பழக்கத்தால் குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தீமைகள் குறித்தும் […]

Continue Reading

இன்ஸ்டாகிராம் காதல் வலையில் சிக்கிய சிறுமி மீட்பு; இளைஞர் போக்சோவில் கைது!

  செய்தியாளர் ; ஜேசுராஜ் அரியலூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அரியலூரில் உள்ள தனியார் தட்டச்சு பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். சம்பவத்தன்று காலை பயிற்சிக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததால், அவரது தாத்தா விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் […]

Continue Reading

விவசாயிகளின்பயிர் கடன் முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய கோரி அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பையுடன் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர்:விவசாயிகளின் பயிர் கடனை , சட்டமன்ற தேர்தலின் போது தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் படி முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பை மற்றும் பயிர்களை கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூரா விசுவநாதன் தலைமை வகித்தார். இதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த சட்டமன்றதேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி, […]

Continue Reading