பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தலைமை நிர்வாகியும் மாவட்ட வருவாய் அலுவலருமான பி.மணிராஜ் தலைமையில் நடைபெற்றது. தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ஜி.சுரேஷ் வரவேற்றார். கூட்டத்தில், கரும்பு டன்னுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.709.50 ஊக்கத்தொகையுடன் மொத்த கொள்முதல் விலை ரூ.4,000 ஆக உயர்ந்துள்ளதற்கு விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். தற்போதைய சூழ்நிலையில் டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். […]

Continue Reading

தலைப்பு: பெரம்பலூர் அருகே 175.527 கிலோ குட்கா பறிமுதல்: பெண் கைது – கார் பறிமுதல்

செய்தியாளர் வசந்த் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANTF) சிறப்பு போலீசார் கைது செய்து, 175.527 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். போலீசார் தெரிவித்ததாவது, சிறுவாச்சூர் அருகே சரவணன் வயல், பெரியசாமி கோவில் பகுதியில் நேற்று (ஜூலை 25) மதியம் சுமார் 1.30 மணியளவில் ANTF சிறப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மருதடி பகுதியைச் சேர்ந்த […]

Continue Reading

5 நாட்களாக குடிநீர் இன்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் – மாவட்ட ஆட்சியரிடம் வாட்ஸ்அப் மூலம் புகார்

செய்தியாளர்:வசந்த் பெரம்பலூர், ஜூலை 24: பெரம்பலூர் துறைமங்கலம் திட்டப் பகுதிக்குட்பட்ட கவுல் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் […]

Continue Reading

புதிய ரேஷன் கடை திறந்தும் பயனில்லை? வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விநியோகம் என மக்கள் வேதனை!

செய்தியாளர் ; வசந்த் பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டதால் அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும் என கூறப்படுவதால் முதியவர்கள், பெண்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, […]

Continue Reading

வைகாசி அமாவாசை: முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

  செய்தியாளர் சுபாஷ் செல்வம் பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலக நன்மை, பருவமழை செழிப்பு மற்றும் மக்கள் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. […]

Continue Reading

பெரம்பலூரில் விசிக – திமுகவினர் மோதல்: கற்கள் வீச்சால் பரபரப்பு

செய்தியாளர் : சுபாஷ் செல்வம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விசிக மற்றும் திமுக கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது. தவக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்த விசிக கட்சிக்கு, சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து […]

Continue Reading

திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர், மே 16: பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. தங்கராசு தலைமையிலும், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னிலையிலும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

பெரம்பலூரில் திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர், மே 16: பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. தங்கராசு தலைமையிலும், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னிலையிலும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

பெரம்பலூரில் சாலை ஆக்கிரமிப்பால் அவதி – நடவடிக்கை கோரி பொதுமக்கள் வேண்டுகோள்

  செய்தியாளர் :வசந்த் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய இணைப்பு சாலைகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடக்கு மாதவி சாலை, எம்.ஆர்.நகர், எதிரி ராயல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் கட்டுமான பொருட்கள், கடை விரிவாக்கங்கள் மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக […]

Continue Reading

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி: 2 பேரை கைது செய்த போலீசார்

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி: 2 பேரை கைது செய்த போலீசார் செய்தியாளர்:சுபாஷ் செல்வம் பெரம்பலூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் பந்தல் பெட்ரோல் பங்க் அருகே வாலிகண்டபுரத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் […]

Continue Reading