பெரம்பலூரில் அகழ் அரங்கம் துவக்க விழா

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்…    பெரம்பலூர் ரோஸ் கார்டன் பகுதியில் அகழ் குழுமத்திற்கு சொந்தமான அகழ் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூரின் வரலாற்று ஆசிரியர் ஜெயபால் ரத்தினம், கவிஞர் சாரங்கபாணி, கவிஞர் ராமர், மொழிபெயர்ப்பாளர் மூர்த்தி, எழுத்தாளர் மோகன். இ. தாகிர் பாட்ஷா, பேச்சாளர் காருண்யா, தலைமை ஆசிரியர் மலர்கொடி, இலக்கிய ஆர்வலர் சுரேஷ்குமார், அகழ் பொறுப்பாளர் ஸ்ரீகாந்த், திவ்யா மற்றும் தலைமை ஆலோசகர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து […]

Continue Reading

அரியலூர் – நகரில் ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம் ஜமீன்தார் தொடங்கிவைத்தார்

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்   அரியலூர் – நகரில் ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம் ஜமீன்தார் தொடங்கி வைக்க பொதுமக்கள் வடம் பிடிக்க வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவில் தேரோட்டத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஒப்பில்லாதம்மனை தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் கோவில் ஜமீன்தார்களின் வம்சாவழி கோவிலாகவும், பல […]

Continue Reading

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி: வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்…   பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், பாலக்கரையில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, எம்.பி., கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் […]

Continue Reading

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா: இன்று ஸ்ரீ சண்டி மகாயாகம்

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்….   பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ள மதுரகாளியம்மன் கோவில் வளாகத்தில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறும் ஆன்மிக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற இக்கோவிலில், சென்னை கோட்டூரில் இயங்கி வரும் ஸ்ரீமஹா மேரு மண்டலி சார்பில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமார்ச்சனை மற்றும் ஸ்ரீ சண்டியாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் 17-வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது. மண்டலியின் […]

Continue Reading

துறையூர் அருகே மீண்டும் பேருந்து விபத்து – 21 பேர் காயம் அலட்சிய அதிகாரிகள் தூங்குகிறார்களா?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குவாடி பகுதியில் இன்று நடைபெற்ற ஆம்னி பேருந்து விபத்து, அதிகாரிகளின் செயலற்ற தன்மையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த துறையூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படாதது அதிர்ஷ்டமாக இருந்தாலும், இந்த விபத்து பெரிய பேரழிவாக மாறியிருக்கக் கூடிய நிலை இருந்தது. விபத்துக்குப் […]

Continue Reading

பெரம்பலூர்: வாக்கு எண்ணும் நாளுக்கான முன்னேற்பாடுகள் – அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

செய்தியாளர் கேப்டன் வசந்த் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 04.05.2026 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (30.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் முன்னிலை வகித்தார். […]

Continue Reading

பெரம்பலூர்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு – மூன்றடுக்கு பாதுகாப்பு உறுதி

செய்தியாளர் கேப்டன் வசந்த் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதவ் பப்ளிக் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் VVPAT கருவிகள் தனித்தனியான பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் மூன்றடுக்கு […]

Continue Reading

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி – வீ. ஜெகதீசன்

செய்தியாளர் கேப்டன் வசந்த் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்காக இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றிய தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோடான கோடி நன்றியை மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,கழகத் தலைவர் […]

Continue Reading

துறையூரில் சித்ரா பௌர்ணமி விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

திருச்சி மாவட்டம் துறையூரில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விநாயகர் தெருவில் அமைந்துள்ள செல்வ மாரியம்மன் திருக்கோவிலில் பத்தாம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்துச் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆத்தூர் சாலையில் உள்ள காவல் தாய் அம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம், “ஓம் சக்தி பராசக்தி” எனும் பக்தி கோஷங்களுடன் பாலக்கரை, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி […]

Continue Reading

புள்ளம்பாடி அருகே நெற்கொள்முதல் நிலைய அலட்சியம் -சாலையில் குவிந்த நெல் மூட்டைகள்

  செய்தியாளர் சுபாஷ் செல்வம் திருச்சி மாவட்டம், புல்லம்பாடி அருகே உள்ள ஆலம்பாடி மேட்டூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நேரடி நெற்கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை அரசு நேரடி நெற்கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நெற்கொள்முதல் நிலைய வளாகத்தில் போதிய இடவசதி இருந்தும், நெல் மூட்டைகள் சாலையோரங்களில் அடுக்கி […]

Continue Reading