அரியலூர்-குணமங்கலத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: கடைக்காரர் கைது

  விக்கிரமங்கலம், மார்ச் 31: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் குணமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது குணமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரது பெட்டிக்கடையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. […]

Continue Reading

அரியலூர் – குணமங்கலத்தில் சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

விக்கிரமங்கலம், மார்ச் 31 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சட்டவிரோத மது விற்பனை சம்பவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்பனை நடைபெறுகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து குணமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜம் (53) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது, வீட்டின் பின்புறத்தில் விற்பனைக்காக மறைத்து […]

Continue Reading

அரியலூர் – விக்கிரமங்கலத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தல்: வண்டி பறிமுதல், ஓட்டுநர் தப்பி ஓட்டம்

விக்கிரமங்கலம், மார்ச் 31: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் போலீசார் பெரிய திருக்கோணம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையத்தான்குடி சாலையிலிருந்து பெரிய திருக்கோணம் நோக்கி வந்த மாட்டு வண்டியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதைக் கண்ட மாட்டு வண்டி ஓட்டுநர், வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்ததில், மருதையாறு படுகை பகுதிகளில் இருந்து பெரிய […]

Continue Reading

அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் பட்டுக்கோட்டை அழகிரியின் 77வது நினைவு நாள் பரப்புரை கூட்டம்

அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் பட்டுக்கோட்டை அழகிரியின் 77 வது நினைவு நாள் பரப்புரை கூட்டம். அரியலூர் அண்ணா சிலை அருகே,திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி அஞ்சான் அஞ்சான் பட்டுக்கோட்டை அழகிரியின் 77வது நினைவு நாளை முன்னிட்டு, பரப்புரை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு அரியலூர் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சி சிவக்கொழுந்து தலைமை தாங்கினார்.பரப்புரைக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.ஜி. மணிகண்டன்வரவேற்றார்.திராவிட கழக மாவட்ட இளைஞரணி […]

Continue Reading

அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு அவர் சொந்த கிராம பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட அதிமுக செயலாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன், அவரது சொந்த கிராமமான தாமரைக் குளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு அவரது சொந்த கிராம பொதுமக்கள், பட்டாசு வெடித்து, பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அதிமுக அவைத் தலைவர் இராம ஜெயலிங்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி சங்கர், மாவட்ட இணை செயலாளர் பிரேம்குமார், ஒன்றிய […]

Continue Reading

அரியலூர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அரியலூர்,மார்ச்28: அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சியில் எழுந்தருளி உலகப் பிரசித்திப் பெற்ற கலியுக ஸ்ரீ வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா, ஆண்டு தோறும் இராம நவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான பெருந் திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்ற நிகழ்வில் கலியுக ஸ்ரீ வரத ராசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, கருடன் உருவம் பொறிக்கப்பட்ட […]

Continue Reading

துறையூர் தொகுதி காங்கிரஸிற்கு ஒதுக்கீடு: திமுகவினர் அண்ணா சிலை அருகே திரண்டு அதிரடி போராட்டம்!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய திமுக தலைமையின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், துறையூர் தனித் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, துறையூர் தொகுதி திமுகவினர் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, துறையூர் அண்ணா […]

Continue Reading

அரியலூர் அருகே பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

அரியலூர் அருகே உள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம் அரசு உதவிபெறும் கே.ஆர்.வி. நடுநிலைப் பள்ளியில், திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளியின் செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை மேலாளர் டாக்டர் கணபதி சுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் தனபால், விழி பரிசோதகர்கள் சத்தியபாமா மற்றும் நிஷாந்தினி […]

Continue Reading

அரியலூர் அருகே மூதாட்டி கொலை – 15 பவுன் நகைகள் கொள்ளை: உறவினர் உட்பட இருவர் கைது

  விக்கிரமங்கலம், மார்ச் 25: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பெரிய திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்த ராஜலட்சுமி (72) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டு, 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமியிடம் இரண்டு இளைஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் பெயரில் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர், தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை […]

Continue Reading

துறையூர் அருகே பச்சைமலை மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பச்சைமலை பகுதியில், மலைவாழ் மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சைமலை பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி சேலம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியும், திருச்சி மாவட்டத்தில் மூன்று ஊராட்சிகளும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான 108 ஆம்புலன்ஸ் சேவை அரசு மருத்துவமனை அமைத்தல் மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி தேசியமயமாக்கப்பட்ட வங்கி வசதி போன்ற 10 […]

Continue Reading