பெரம்பலூரில் நரிக்குறவர் காலனி மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைப்பு

பெரம்பலூர்

நியூஸ் ஜீவா

பெரம்பலூர், ஏப்.19:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், எறையூர் சர்க்கரை ஆலை அருகிலுள்ள நரிக்குறவர் காலனியில், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர்களான வழக்கறிஞர் ம.க.ச. இரத்தினவேல் மற்றும் வழக்கறிஞர் மு. உதயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், கட்சியின் கொள்கைகளை ஏற்று தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய சாக்யமணிவண்ணன், சமூக முன்னேற்றத்திற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பணி அவசியமானது எனக் கூறினார்.

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வினோதன், புஷ்பவள்ளி, விஜயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *