நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தேமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, தாயார் இறந்த நிலையில் சித்தி வீட்டில் தங்கிப் படித்து வந்தார்.
சித்தியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, நாகை ரயில் நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் தனியாகத் தவித்துள்ளார். தகவலறிந்த வெளிப்பாளையம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நற்குணன் தலைமையிலான ‘சிங்கப்பெண்’ போலீசார் மாணவியை மீட்டு அரசு சத்யா இல்லத்தில் தங்க வைத்தனர்.
பின்னர் குழந்தைகள் நல அதிகாரிகளுடன் இணைந்து மாணவிக்கும் அவரது சித்திக்கும் உரிய கவுன்சிலிங் வழங்கி, மாணவியை குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்
