நாகையில் காங்கிரஸ் எம்பி, ராகுல் காந்தியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, காங்கிரஸ் எம்பி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவருமான அங்கும்சா பிமோல் அகோயஜம் மீது 11 மாணவிகள் பாலியல் தொல்லை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, […]

Continue Reading

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கின் முன் காங்கிரஸ் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

கோவை சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தெரிவிக்க முயன்றும் மாநகராட்சி மேயர் சந்திக்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு! கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கின் முன்பு, மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், தனது வார்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காகத் தன்னைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளதாகக் கவுன்சிலர் காயத்ரி குற்றம் சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான தான், […]

Continue Reading

கோவையில் அரிகேன் விளக்குடன் அதிமுக கவுண்சிலர்கள் ஆர்ப்பாட்டம் பரபரப்பு.

கோவை கோவை மானகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், மற்றும் ரமேஷ் ஆகியோர் தெருவிளக்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைக்களுக்காக அரிகேன் விளக்குடன் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியில் இன்று சாதாரணக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கோவையின் அடிப்படை வசதிகள் முடங்கிப் போய் இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த நான்கு […]

Continue Reading

கோவை ராக்ஸ் விளையாட்டு அகாடமி சார்பில் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரருக்கு பாராட்டு விழா

கோவை ராக்ஸ் விளையாட்டு அகாடமி சார்பில் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சாதனைப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், டாக்டர் புல்லேலா கோபிசந்த் மற்றும் அவரது குழுவினர், ராக்ஸ் பள்ளி மற்றும் விளையாட்டு அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி, பேட்மிண்டன் குருகுல், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கங்கள் மற்றும் ஆதரவாளர்களின் பங்களிப்பு நினைவுகூரப்பட்டது. 2017-ஆம் ஆண்டு ராக்ஸ் விளையாட்டு […]

Continue Reading

50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை

கோவை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் எனச் சாவித் தொழிலாளர்கள் நலச்சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் நலன், மருத்துவ முகாம், நிதிநிலை அறிக்கை, தொழில் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சாவித் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 10,000 பெண் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசிடம் வலியுறுத்தப்பட்டது. […]

Continue Reading

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்.

கோவை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அப்பொழுது பேசிய அவர் : ‘மத்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ என்ற சொற்களை வைத்து இரு அரசுகளுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.நெசவாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே தெளிவான விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தார். தொழிற்சாலைகளின் மின்சாரக் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும், தேர்தலில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் […]

Continue Reading

கோவையில் பரபரப்பு: டாஸ்மாக் பாரில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்கள் கைது!

ரூ.1.86 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்! கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுபானம் வாங்குவதற்காக கள்ள நோட்டுகளை கொடுத்து, பொதுமக்களிடையே புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். கோவை பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள ‘கோவை லேக் வியூ கிளப்’ அருகே ’11 […]

Continue Reading

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக 228 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை

கோவை மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் நோக்கில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி, உத்தரவின்பேரில் கோவை, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று (11.10.2026) அதிகாலை முதல் கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் சிறப்பு அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். […]

Continue Reading

தேசிய இசைப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து கோவை சி.எஸ். அகாடமி மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான யமஹா இசைப் போட்டியில், கோவை சி.எஸ். அகாடமி பள்ளியின் இசைக்குழுவான சி.எஸ். ஹவுலர்ஸ் (CS Howlers) இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 270-க்கும் மேற்பட்ட பள்ளி இசைக்குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் இசை நிகழ்த்தி மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்குழு, பல்வேறு போட்டிச் சுற்றுகளைக் கடந்து தேசிய அளவில் முதல் 20 இசைக்குழுக்களில் ஒன்றாகத் தேர்வானது. […]

Continue Reading

காகிதம் விலை உயர்வால் அட்டைப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்!

கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழிலை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அவிநாசி சாலையில் உள்ள அவர்களது சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் போர் பதற்றம் காரணமாக அட்டைப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் […]

Continue Reading