இராஜபாளையம் சிஎஸ்ஐ தூய பவுல் ஆலயத்தில் உணவு திருவிழா 1000 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பொதுமக்கள் பங்கேற்பு

Uncategorized

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்
சி எஸ் ஐ தூய பவுல் ஆலயத்தில் மதுரை ராமநாதபுரம் பேராயத்திற்க்கு உட்பட்ட இராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள பரி பவுல் ஆலயம், பரி பேதுரு ஆலயம், பரி அந்திரேயா ஆலயம் ,
நல் மேய்ப்பர் ஆலயம், பரி யோவான் ஆலயம், சார்பில் ஸ்தோத்திரப்பண்டிகை என்று அழைக்கப்படும் உணவு திருவிழா மற்றும் விற்பனை விழா நடைபெற்றது இந்த உணவு திருவிழாவில் இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள ஐந்து சிஎஸ்ஐ பேராலயங்களை சேர்ந்த மக்கள் தயார் செய்த பிரியாணி, பூரி, வடை, பணியார வகைகள் போன்ற உணவுப் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து அதில் வருகின்ற லாப பணத்தை சிஎஸ்ஐ சபை வளர்ச்சிக்காக வழங்கினார்கள்,அதேபோல் விலை உயர்ந்த வைர மற்றும் தங்க மோதிரங்கள் உணவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு அந்த பணமும் திருச்சபை பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை இராஜபாளையம் சிஎஸ்ஐ ஆலயத்தின் அருள் திரு சாம்கிரியோன், மற்றும்
கெளரவ ஆயார் ஜோதிமணி ஆகியோர் ஜெபம் செய்து உணவுத் திருவிழாவை துவங்கி வைத்தனர், இந்த உணவு திருவிழாவில் ஏற்பாடுகளை சிஎஸ்ஐ சபை குரு, கெளரவ குரு மற்றும் சபை மக்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த உணவுத் திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *