நாகையில் காங்கிரஸ் எம்பி, ராகுல் காந்தியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை

பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, காங்கிரஸ் எம்பி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவருமான அங்கும்சா பிமோல் அகோயஜம் மீது 11 மாணவிகள் பாலியல் தொல்லை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, நாகப்பட்டினம் மாவட்ட பாஜக சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் விஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி, மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்டத் துணைத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சம்பந்தப்பட்ட காங்கிரஸ் எம்பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராகுல் காந்தியைக் கண்டித்தும் பாஜகவினர் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்டப் பொதுச் செயலாளர் மணிமேகலை, நாகப்பட்டினம் மாவட்டத் துணைத் தலைவர் சுமதிகணேசன், மகளிர் அணியின் மாவட்டத் தலைவி விஜிலா, நகரத் தலைவர் அற்புதம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *