திருச்சி: திருவெறும்பூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்

திருச்சி
திருச்சி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், போலீசாரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, போதிய ஆவணங்கள் இன்றி இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டதால், அதனை போலீசார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட அந்தப் பணத்தை, திருவெறும்பூர் வட்டாட்சியரும், அத்தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான திரு. வி. கார்த்திகேயன் அவர்களிடம் போலீசார் முறைப்படி ஒப்படைத்தனர்.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *