துறையூர் -குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால், பொதுமக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக துறையூர்–பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் பணிக்குச் செல்லும் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தகவல் அறிந்து வந்த துறையூர் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். […]

Continue Reading

அரியலூரில் சாலை விரிவாக்கம் சர்ச்சை மக்கள் கடும் எதிர்ப்பு

அரியலூர், ஏப்ரல் 25: அரியலூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. விளான்குடி – கைகாட்டி பகுதிகளை இணைக்கும் முக்கியத் தார்சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளின் போது, சாலையோரங்களில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் மற்றும் பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் மரங்களை அகற்றியதாக கூறப்படுகிறது. குறிப்பாக கைகாட்டி பகுதியில் செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையால் […]

Continue Reading

துறையூர் தனி சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நிறைவடைந்தது

திருச்சி மாவட்டம் துறையூர் தனி சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நிறைவடைந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2,10,685 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,81,917 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 86,007 பேர், பெண்கள் 95,890 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 20 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 86.35 ஆக பதிவாகியுள்ளது. மொத்தம் 297 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, நாள் […]

Continue Reading

பெரம்பலூரில் வாகன சோதனையில் ரூ.2.44 கோடி பறிமுதல் – இருவர் விசாரணையில்

பெரம்பலூர். ஜீவா பெரம்பலூர், ஏப்ரல் 21: பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகே நேற்று இரவு சுமார் 12 மணியளவில், கலால் மேற்பார்வை அலுவலர் பழனிசெல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குன்னம் தொகுதிக்குட்பட்ட கீழ்ப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் கிருஷ்ணன் (25) இயக்கிய காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பயணம் செய்த கீழ்ப்புலியூரைச் சேர்ந்த திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் (64) […]

Continue Reading

குன்னம் தொகுதியில் பாரிவேந்தர் – ஜி.கே. வாசன் தீவிர பிரச்சாரம்

செய்தியாளர் சுபாஷ் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தின் காரை கிராமத்தில், இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) வேட்பாளர் சரண்யா அன்பழகனுக்கு ஆதரவாக ஐஜேகே தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். முன்னதாக ஆலத்தூர் கேட் பகுதியில் இருந்து இருசக்கர வாகனப் பேரணியுடன் பாரிவேந்தர் மற்றும் ஜி.கே. வாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தின் […]

Continue Reading

அகரம்சீகூர் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ40–50 வசூல் குற்றச்சாட்டு

செய்தியாளர்: சுபாஷ் செல்வம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அகரம்சீகூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அந்த நிலையத்தில் பணியாற்றி வரும் PC தமிழ்வேந்தன் என்பவர், நெல் மூட்டைக்கு ரூ40 முதல் 50 வரை சட்டவிரோதமாக வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வசூல் காரணமாக, ஏற்கனவே பல சிரமங்களை சந்தித்து வரும் விவசாயிகள் கூடுதல் நிதிச்சுமையை […]

Continue Reading

பெரம்பலூரில் நரிக்குறவர் காலனி மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைப்பு

நியூஸ் ஜீவா பெரம்பலூர், ஏப்.19: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், எறையூர் சர்க்கரை ஆலை அருகிலுள்ள நரிக்குறவர் காலனியில், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர்களான வழக்கறிஞர் ம.க.ச. இரத்தினவேல் மற்றும் வழக்கறிஞர் மு. உதயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், கட்சியின் கொள்கைகளை ஏற்று தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய சாக்யமணிவண்ணன், […]

Continue Reading

பெரம்பலூரில் திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு

செய்தியாளர் சுபாஷ் செல்வம் பெரம்பலூர், ஏப். 19: பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர் ஜெயசீலன் தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தேவேந்திர குல பேரவை மாவட்ட செயலாளர் நித்திஷ் குமார், வளரும் தமிழகம் மாவட்ட செயலாளர் செல்வன், தீபக் பாண்டியன் பேரவை மாவட்ட செயலாளர் திரவிந்த்ராஜ், தமிழ் மாநில […]

Continue Reading

பெண்களுக்கு, தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை – நடிகை .விந்தியா.

  த பாலசுப்பிரமணியம் அரியலூர் பெண்களுக்கு, தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என அரியலூரில் அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நடிகை .விந்தியா. அரியலூரில் அதிமுக வேட்பாள் தாமரை எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து, அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது:திமுக தனது கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் தமிழக மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. திமுகவை பொருத்தவரை தேர்தலுக்கு முன்பு ஒன்று கூறுவார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு ஒன்று கூறுவார்கள் […]

Continue Reading

பா.ஜ.க. குனியச் சொன்னால், படுத்தே விட்டார் பழனிசாமி -மு.க. ஸ்டாலின்

நியூஸ் ஜீவா பெரம்பலூர் பா.ஜ.க. குனியச் சொன்னால், படுத்தே விட்டார் பழனிசாமி; இப்படிப்பட்ட அடிமைகளின் துணையோடு தமிழ்நாட்டிற்குள் நுழைய நினைப்பவர்களை எல்லையிலேயே நாம் தடுத்து நிறுத்த வேண்டும்! பா.ஜ.க.விடம் தமிழ்நாடு சிக்கினால், ஜம்மு காஷ்மீரை உடைத்தது போன்று தமிழ்நாட்டையும் மூன்று யூனியன் பிரதேசமாகத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவார்கள்! கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.04.2026) பெரம்பலூரில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்: “வாழ்ந்தவர் கோடி […]

Continue Reading