
த பாலசுப்பிரமணியம் அரியலூர்
பெண்களுக்கு, தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என
அரியலூரில் அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நடிகை .விந்தியா.
அரியலூரில் அதிமுக வேட்பாள் தாமரை எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து, அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது:திமுக தனது கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் தமிழக மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
திமுகவை பொருத்தவரை தேர்தலுக்கு முன்பு ஒன்று கூறுவார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு ஒன்று கூறுவார்கள் . காலையில் காலில் விழுவார்கள் மாலையில் கழுத்தைப் பிடிப்பார்கள்.இந்த திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
இளம் பெண்கள் வெளியில் சென்றால் நேரத்தில் வர வேண்டும் என்று பெற்றோர்கள் கவலைப்படுவதில்லை. தற்பொழுது மானத்தோடு வரவேண்டும் என்று கவலைப்படுகின்றனர். இரண்டரை வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
திமுக தோல்வி பயத்தில் ரூ.8,000 கூப்பன் என்று கூறி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் கூப்பன் ஒன்றுக்கும் பயன்படாது, கூப்பனை குப்பையில் வீசுங்கள்.அது ஆடி தள்ளுபடிக்கு கொடுக்கும் டோக்கன் போல உங்களை ஏமாற்றக் கொடுக்கும் கூப்பன்.
நகைக் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, மகளிர் உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என்று பல வாக்குறுதிகளை பொய்யாக தருவார்கள். நீங்கள் திமுகவை தள்ளுபடி செய்யுங்கள்.
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் வெட்டு, குத்து, கொலை என்று நடைபெறுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வந்து தற்பொழுது தனது குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக திமுக ஆட்சி செய்கிறது
எடப்பாடி பழனிசாமி தற்பொழுது மக்களுக்காக 297 திட்டங்களை அறிவித்துள்ளார். பெண்களுக்கு மூன்று சிலிண்டர்கள் 150 நாள் வேலைத்திட்டம், அனைவருக்கும் அம்மா இல்லம் திட்டம், மாணவர்களுக்கு உதவித்தொகை ,சிறு வியாபாரிகள் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு குளிர்சாதன பெட்டி, மகளிர் வாழ்வில் வெளிச்சம் வர குலவிளக்கு திட்டம், மாதம் ரூ.2000 உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
திமுக கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சி செய்து நல்ல திட்டங்களை செயல்படுத்தாததால் கூட்டணியை நம்பி திமுக தேர்தலை சந்திக்கிறது.
மேலும் தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆகவே திமுகவை ஒழிக்க அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு, உங்கள் வேட்பாளர் தாமரை எஸ் இராஜேந்திரனுக்கு வாக்களியுங்கள் என பேசினர்.

