திருச்சி அருகே கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

திருச்சி

திருச்சி, மே. 2-

நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 59). லாரி டிரைவரான இவர், தனது லாரியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது, சாலையோரம் லாரியை நிறுத்தினார்.
பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக பழனியப்பன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய பழனியப்பன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான பழனியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
விபத்து குறித்து பழனியப்பனின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காரை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது22) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *