விவசாயிகளின்பயிர் கடன் முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய கோரி அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பையுடன் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர்

அரியலூர்:விவசாயிகளின் பயிர் கடனை , சட்டமன்ற தேர்தலின் போது தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் படி முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பை மற்றும் பயிர்களை கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூரா விசுவநாதன் தலைமை வகித்தார். இதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த சட்டமன்றதேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி, 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத பயிர் கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர் கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும்தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பயிர் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும், முழு கடன் தள்ளுபடி செய்யாமல் குறிப்பிட்ட தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பூரா விசுவநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
ரூ.50 ஆயிரம் பயிர் கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு குறைந்த அளவிலான தள்ளுபடி வழங்கும் அறிவிப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை,தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது ,

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என கூறிய நிலையில், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
என தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், செந்துறை ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன், அரியலூர் ஒன்றிய தலைவர் அறிவழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளவரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

<b> Total Views: 9 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *