
செய்தியாளர் : விஜய்
உலக யோகா தினத்தை முன்னிட்டு நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி பல்வேறு யோகாசனங்களை செய்து யோகாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் ஆச்சாரியார் சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவர்கள் தலைமை தாங்கி, யோகா மனிதனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த கலையாகும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு யோகா செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள், மனஅழுத்தம் குறைதல், உடல் நெகிழ்வுத்தன்மை அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி சி. கீதா பென்னட் அவர்கள் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக மேற்கொண்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த யோகா நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது. உலக யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு மாணவர்களிடையே ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.
<b> Total Views: 11 </b>

