துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி சார் பதிவாளர் மகாராஜன், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து, சார் பதிவாளர் மகாராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அலுவலக பணியாளர்கள், பத்திர எழுத்தாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்த சார் பதிவாளர் மகாராஜன், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அலுவலகப் பணியாளர்கள் பிரேமலதா, சுகந்தி, தீபிகா, பாலாஜி, சக்தி, முருகன், வேல்முருகன் மற்றும் பத்திர எழுத்தாளர்கள், உதவியாளர்கள் மணி, சுதாகர், சுரேஷ், சின்னராசு, சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

<b> Total Views: 22 </b>

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *