
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்பாட்டம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் ஆவின் பால் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இப்பகுதியைச் சேர்ந்த மாடு வளர்ப்போரிடமிருந்து தினமும் சுமார் 10,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாகவே லிட்டருக்கு பால் 30 முதல் 36 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை தங்களுக்கு கட்டுபடி ஆகவில்லை என மாடு வளர்க்கும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர் மேலும் கடந்த நான்கு வருடத்தில் பருத்திக்கொட்டை புண்ணாக்கு உள்ளிட்ட மாட்டு தீவனங்கள் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன ஆனால் தங்களுக்கு பால் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்நிலையில் தங்களுக்கு லிட்டருக்கு கொள்முதல் விலையாக ₹50 வழங்க வேண்டும் என கலிங்கமுடையான் பட்டி ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது அவர்கள் பால் விலையை உயர்த்தி தரக்கோரி தமிழக அரசை கண்டித்து உயர்த்திக் கொடு உயர்த்திக் கொடு பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடு என கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் வெளி மாநில பால் நிறுவனங்கள் பாலை அதிக விலைக்கு கொள்முதல் செய்யும் நிலையில் ஆவின் நிறுவனம் தங்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு பாலை கொள்முதல் செய்வதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தரையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
<b> Total Views: 69 </b>

