
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் தவெக கட்சியின் வேட்பாளராக திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரவிசங்கர் அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ரவிசங்கர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் துறையூர் பாலக்கரை பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க, விசில் சத்தத்துடன் உற்சாக ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சென்றார்.
பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வு துறையூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பிஜய்குமார்தாஸ், தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறன் மற்றும் துணை தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டாட்சியருமான சிவக்குமார் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்வில் தவெக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், மாவட்ட இணை செயலாளர் மதன், துறையூர் தெற்கு நகர செயலாளர் வினோத், வடக்கு நகர செயலாளர் சூர்யா, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எழிலரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

