
அரியலூர், ஏப். 9:
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் எஸ். இராஜ்குமார், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அவர் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி த. பிரேமியிடம் வழங்கி, உறுதிமொழி வாசித்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏ.ஆர்.வி. தமிழரசன், சுள்ளங்குடி சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

