
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார். இந்நிலையில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு தொகுதிகளில் தினந்தோறும் பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எறையூரில் நரிக்குறவமக்களிடம் இன்று வாக்கு சேகரிப்பு ஈடுபட்டபோது நரிக்குற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துடன் நரிக்குற மக்கள் மற்றும் வெற்றி வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்செல்வன் நடனமாடி அனைவரையும் உற்சாகபடுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரும் கவனத்தையும் ஈர்த்தது.

