
செய்தியாளர் சுபாஷ் செல்வம்
பெரம்பலூர், ஏப். 19:
பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர் ஜெயசீலன் தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தேவேந்திர குல பேரவை மாவட்ட செயலாளர் நித்திஷ் குமார், வளரும் தமிழகம் மாவட்ட செயலாளர் செல்வன், தீபக் பாண்டியன் பேரவை மாவட்ட செயலாளர் திரவிந்த்ராஜ், தமிழ் மாநில திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்டோர் தங்களது அமைப்பினருடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் ஜெயலட்சுமிக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் அறிவித்தனர். மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் உறுதியளித்தனர்.
இந்த ஆதரவு அறிவிப்பு பெரம்பலூர் தொகுதியில் திமுகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

