துறையூர் தனி சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நிறைவடைந்தது

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூர் தனி சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நிறைவடைந்தது.

இந்த தொகுதியில் மொத்தம் 2,10,685 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,81,917 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 86,007 பேர், பெண்கள் 95,890 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 20 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 86.35 ஆக பதிவாகியுள்ளது.

மொத்தம் 297 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, நாள் முழுவதும் உற்சாகமாக நடைபெற்றது. பெண்கள் மற்றும் ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மேலும், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் தபால் வாக்கு அளிக்க முடியாதவர்கள் கூட உறுதியுடன் வந்து வாக்களித்தனர். சிலர் வீல்சேரில் அமர்ந்தபடியே வந்து தங்களது வாக்கை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், துறையூர் தொகுதியில் அமைதியான மற்றும் உற்சாகமான சூழலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *