
செய்தியாளர் : கேப்டன் வசந்த்…
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், பாலக்கரையில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, எம்.பி., கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆதவ் தனியார் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வருகிற மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை நாளில் முகவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், இறுதி சுற்று வரை ஒவ்வொரு வாக்கையும் முழுமையாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் ஆ.இராசா வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், வேட்பாளர் டாக்டர் எஸ்.டி.ஜெயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

