
வாழ்க்கையை வசப்படுத்த எண்ணங்களை மேம்படுத்துங்கள்:
கல்லூரி ஆண்டு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் மாணவர்களிடையே உரை
ஏப்ரல் 9, 26, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இளைஞர் எழுச்சி விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் பொறுப்பு முனைவர் பெ. ராமராஜ் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். கணிதத்துறை தலைவர் முனைவர் கி. சக்திவேல் அனைவரையும. வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் முனைவர் வேலு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றினார். மாணவர்களிடையே பேசும்போது, “தன்னம்பிக்கையும் விடா முயற்சியின் மூலமாகவே மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற முடியும். எண்ணங்களை மேம்படுத்துங்கள். வாழ்வு எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறது. ஆகவே எதிர்மறையான எண்ணங்களை விட்டொழியுங்கள். ஒரு பறவையின் சுதந்திரத்தோடு வானமும் வசப்படும்” என்றார். விழாவில் பல்கலைக்கழக தேர்வில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இயற்பியல் துறைத் தலைவர் உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) முனைவர் பி. பாஸ்கரன் நன்றி கூறினார். ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் க. மூர்த்தி, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பெ. முத்துராஜ், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர். ஏ. எஸ் ஹேமா உள்ளிட்ட துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டினை அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தினர்.

