திருச்சி வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருச்சி

 

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் .

கூட்டத்திற்கு தலைமை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் (04/05/26 )அன்று வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முக்கிய பங்கேற்பாளர்கள்:
இக்கூட்டத்தில் தி.மு.க சட்டத்துறைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கலந்துகொண்டு, வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்க உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பின்வருவோர் பங்கேற்றனர்:

மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன்,
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ்,
மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அப்துல் சமது,
தொகுதி பார்வையாளர்கள் கே.என். சேகரன், மறைமலை,

கூட்டத்தின் சிறப்பம்சங்கள்:-
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைவது முதல், படிவம் 17C-ஐ சரிபார்ப்பது மற்றும் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவுகளை உறுதி செய்வது வரை சட்ட ரீதியான நுணுக்கங்களை என்.ஆர். இளங்கோ முகவர்களுக்கு விளக்கினார். இதில் தலைமை முகவர்கள் மற்றும் அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *