
தொட்டியம், ஏப். 30:
திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2026–2027ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழுத் தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தல் முடிவுகளின்படி, சங்கத்தின் தலைவராக வி.ஆர். கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக பெரிய. பார்த்திபன், மகளிருக்கான துணைத் தலைவராக ஜி. துர்காதேவி ஆகியோர் பொறுப்பேற்றனர்.
மேலும், செயலாளராக ஏ. அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்ட நிலையில், இணைச் செயலாளராக ஜி. பிரசாந்த் மற்றும் மகளிருக்கான இணைச் செயலாளராக எம். நதியா தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளராக ஏ. முருகானந்தம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தேர்தல் முடிவுகளை தேர்தல் அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். புதிய நிர்வாகிகளுக்கு தொட்டியம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

