துறையூரில் துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

துறையூர்

பேருந்து நிலையப் பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கருக்கு துறையூரில் உற்சாக வரவேற்பு அளித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர், துறையூர் ரவுண்டானா முசிறி பிரிவு ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலைய பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு துணை சபாநாயகர் ரவிசங்கர் மாலை அணிவித்தார், தொடர்ந்து துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்,

செய்தியாளர்களுக்கு பேட்டி,
துறையூர் தொகுதி வளர்ச்சி குறித்து கேட்டதற்கு

துறையூர் பகுதியில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், குடிநீர் வசதி, பல்வேறு கட்ட அமைப்புகளை உருவாக்கி நிறைவேற்றப்படும்,
ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு சின்ன ஏரியில் போட்டிங் வசதியுடன், மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, சரணாலயம் போல் ஏற்பாடு செய்து சுற்றுலா தளமாக அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்..

மலைவாழ் மக்களுக்கு தாங்கள் செய்வது குறித்து கேட்டதற்கு

பச்சைமலை பகுதி மக்கள் பல கிராமங்கள் இணைந்து ஒன்றியமாக அமைக்க வேண்டும், இதற்கான முன்னெடுப்புகளை எடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும், பச்சைமலை செல்வதற்கு பேருந்துகள் காலதாமதம் ஆகும் நேரத்தில் கேரளாவை போல ஜீப் மூலம் பொது மக்களை ஏற்றி மழைக்குச் சென்று அங்கிருந்து கீழே வருவதற்கும் ஏற்பாடுகள் செய்ய உள்ளேன், துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டி திறக்கப்படாமல் உள்ளது குறித்து கேட்டதற்கு கட்டிடம் தரமாக கட்டப்பட்டுள்ளதா எனவும் 20% எடுத்துவிட்டு 80% கட்ட வேண்டியதற்கு, 80% எடுத்துவிட்டு 20% கட்டியிருந்தால் கட்டிடத்தை குத்தி தரம் பார்த்து ஆய்வு செய்து திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்,

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *