
அரியலூர், மே 16:
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, திமுக ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராஜன், நகர திமுக செயலாளர் இரா. முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் ம. அன்பழகன், விசிக ஒன்றிய செயலாளர் இரா. உத்ராபதி, தமிழ் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் பெ. பாரிவள்ளல், மதிமுக ஒன்றிய செயலாளர் பி. சங்கர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், விசிக ஒன்றிய செயலாளர் அ.செ. தங்கராசு, திராவிடர் கழக நகர தலைவர் துரை காமராஜ், நகர செயலாளர் ஆட்டோ தர்மா, சிபிஐ ஒன்றிய செயலாளர் தூ. பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் முன்னாள் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, மதிமுக மாவட்ட செயலாளர் க. இராமநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவக்குமார், மண்டல துணை செயலாளர் ம. கருப்புசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன், சிஐடியு நிர்வாகிகள் பி. துரைசாமி, எல்.ஐ.சி. கிருஷ்ணன், ஆர். சிற்றம்பலம், விசிக மாவட்ட பொருளாளர் மருதவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, “நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்”, “மாநில அரசின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வை கைவிட வேண்டும்” எனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் 89 முறை கசிந்தது மற்றும் 48 முறை மறுதேர்வு நடத்தப்பட்டதாக கூறி அதனை கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தா. மதியழகன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் கோ. பாண்டியன், திருமானூர் ஒன்றிய தலைவர் க. சிற்றரசு, ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் க. ரவிவளவன், விசிக நகர செயலாளர் தலித் தாசன், ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், திராவிடர் கழக அரியலூர் ஒன்றிய செயலாளர் த. செந்தில் நன்றி கூறினார்.
Total Views: 47

