வைகாசி அமாவாசை: முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

பெரம்பலூர்

 

செய்தியாளர் சுபாஷ் செல்வம்

பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலக நன்மை, பருவமழை செழிப்பு மற்றும் மக்கள் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்குபேட்டை அன்னதான குழுவினர் செய்திருந்தனர். கோயில் பூசாரி வெ.நீதிதேவன், நிர்வாகி கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

<b> Total Views: 10 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *