4 வருஷமா வெயிட்டிங்! உப்பிலியபுரம் அருகே அதிகாரிகளின் ‘ஆமை வேக’ சாதனை!

துறையூர்

விண்வெளிக்குச் செல்லும் காலத்தில், 4 வருஷமா வெயிட்டிங்! உப்பிலியபுரம் அருகே அதிகாரிகளின் ‘ஆமை வேக’ சாதனை!

“டிஜிட்டல் இந்தியா”, “வல்லரசு இந்தியா” என நாடே ஜெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சபெருமாள்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுக்கல் கிராமத்திலோ அதிகாரிகள் ‘டைம் டிராவல்’ செய்து கற்காலத்திற்கே மக்களைக் கொண்டு சென்று சாதனை படைத்து வருகிறார்கள்!

இப்பகுதி மக்களின் தாகம் தீர்க்க, 4 வருடங்களுக்கு முன்பு ஒரு ‘’ குடிநீர் தொட்டி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. ஆனால், என்ன பிரயோஜனம்? அந்தத் தொட்டிக்கு மின் மோட்டர் இல்லை, தொட்டிக்கு நீர் வழங்க குழாய் இல்லை! விளக்கு இல்லாத காரை வாங்கி வீட்டின் முன்னாடி நிறுத்தி அழகு பார்ப்பது போல, தண்ணீரே இல்லாத தொட்டியை நான்கு வருடங்களாக மக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். “தொட்டி இருக்கு… ஆனா அதுல தண்ணி வராது” என்கிற வடிவேலுவின் கிணற்றைக் காணோம் காமெடி பாணியில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தத் தொட்டி எந்தப் பயனும் இன்றி ‘ஷோ பீஸ்’ ஆகக் காட்சியளிக்கிறது.

தண்ணீருக்காக ‘வாக்கிங்’ போகும் பொதுமக்கள்!

முக்கிய குடிநீர் ஆதாரம் இப்படி முடங்கிக் கிடப்பதால், அப்பகுதி மக்கள் தினமும் தண்ணீருக்காகக் குடங்களைத் தூக்கிக்கொண்டு கிலோமீட்டர் கணக்கில்வாக்கிங்’ மற்றும் ‘ரன்னிங்’ போகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உடற்பயிற்சிக்கு அரசு முக்கியத்துவம் தருகிறதோ இல்லையோ, அதிகாரிகள் தங்களின் அலட்சியத்தால் மக்களுக்கு நல்ல ‘கனத்த’ உடற்பயிற்சியை இலவசமாகவே வழங்கி வருகிறார்கள்.

தூங்கும் அதிகாரிகள் விழிப்பார்களா
குண்டுகள் மக்களின் குடிநீர் பிரச்சினை தீருமா?

 

<b> Total Views: 42 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *