நாகையில் சீனியர் பீச் வாலிபால் லீக்: வெற்றியாளர்களுக்கு எஸ்பி பரிசு

நாகப்பட்டினம்

 

நாகப்பட்டினம் பீச் வாலிபால் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சீனியர் பீச் வாலிபால் லீக் சேம்பியன்ஷிப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெற்றன.

அகாடமி தலைவர் மோகன்தாஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 8 சீனியர் அணிகள் பங்கேற்று பலத்த போட்டியை வெளிப்படுத்தின.

நிறைவு நாளில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா தலைமை வகித்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

போட்டியில் அபிதன்–கிளிண்டன் ஜோடி முதலிடம், ஹரிஸ்–அர்ஷத் இரண்டாம் இடம், பாஹிம்யாசர்–டெண்டுல்கர் மூன்றாம் இடம், பூந்தமிழன்–பவித்ரன் நான்காம் இடம் பெற்றனர்.

மேலும், மாணவி கார்த்திகாயாயிணிக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், 15 வீரர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டன. விழாவில் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி, அகாடமி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.

 

<b> Total Views: 3 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *