துறையூரில் பயிர் கடன் பிரச்னையால் நகை கிடைக்காமல் விவசாயி மன வேதனையில் வங்கி முன் விவசாயிகளுடன் தர்ணா போராட்டம்..

துறையூர்

மனைவியின் 6 சவரன் நகையை மீட்டுத்தர அரசுக்கு கோரிக்கை..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜன் 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார், கடந்த ஓராண்டுக்கு முன்பாக ஆர் 1586 கோட்டப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.5 லட்சம் பயிர் கடன் பெற்றுள்ளார், மீண்டும் விவசாய செலவுக்காக மனைவியின் 6 சவரன் நகையை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்துள்ளார், தற்போது திருமண நிகழ்ச்சிக்காக நகையை மீட்க பைனான்சில் பணம் பெற்று ரூபாய் 2.5 லட்சம் தனிநபர் நகை கடனுக்காக செலுத்தியுள்ளார், மீண்டும் ரூபாய் 500 செலுத்த வேண்டும் என்றும் பயிர் கடனை முழுமையாக செலுத்தினால் தான் நகை வழங்கப்படும் என வங்கியின் செயலாளர் கூறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்,


கடன் பிரச்னையால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவதாக கூறி மனைவியின் நகையை மீட்டுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுந்தர்ராஜன் குடும்பத்தினர் மற்றும் இதே நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கி முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள், இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

<b> Total Views: 3 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *