துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் – பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு

துறையூர்

 

துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது

பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு

திருச்சி மாவட்டம் துறையூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கிய பேரவை ஒருங்கிணைக்கும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நேற்று (02.08.2026) மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநில துணைச் செயலாளர் க. நிலவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பீட்டர் செல்வரத்தினம் வரவேற்புரையாற்றினார்.

துறையூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் துரைசங்கர் மற்றும் முசிறி–குளித்தலை சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் குறிச்சி சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பேரவை மாநிலச் செயலாளர் யாழன் ஆதி கருத்துரையும், பேரவை நீதி செயலாளர் பேராசிரியர் வெற்றி சங்கமித்ரா நோக்க உரையும் வழங்கினர்.

மேலும், மகளிர் விடுதலை இயக்கத்தின் முதன்மைச் செயலாளர் ஆதிமொழி, தேர்தல் பணிக்குழு மாநில நிதிச் செயலாளர் அ.க. தமிழ் ஆதன் மற்றும் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பெ. தமிழ் முதல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

இறுதியாக பேரவையின் மாவட்டத் துணை அமைப்பாளர் நா. பரமானந்தம் நன்றி கூறினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் சே. கமலக்கண்ணன், பிரகதீஸ்வரன், கேசவன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *