செய்தியாளர்:அருண் – 90959 25936
திருச்சி மாவட்டம் துறையூரில் சர்வதேச ஷிடோரியோ கராத்தே மற்றும் கோபுடோ மையத்தின் சார்பில் 6-வது ஆண்டு மாநில அளவிலான கராத்தே மற்றும் கோபுடோ போட்டி, துறையூர் சி.எம்.எஸ். கூட்டுறவு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தே மற்றும் கோபுடோ பிரிவுகளில் தங்களது தற்காப்புக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். வயது அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.
போட்டியை முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தற்காப்புக் கலைகள் உடல் ஆரோக்கியம், மன உறுதி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதால், மாணவர்கள் அதிக அளவில் கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. வெற்றியாளர்களை பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், மாவட்ட இணை செயலாளர் மதன், துறையூர் நகர செயலாளர் வினோத், துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
மேலும் கராத்தே பயிற்சியாளர்கள், நடுவர்கள், பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று போட்டிகளை உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் சர்வதேச ஷிடோரியோ கராத்தே மற்றும் கோபுடோ சென்டர் நிறுவனர் மணிகண்டன் நன்றியுரை வழங்கினார்.
<b> Total Views: 245 </b>

