அரியலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சேவை சங்கத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா

அரியலூர்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சேவை சங்கத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவும், 2026-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டமும் அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பயிற்சிப் பள்ளி கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை வாசித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மனிதநேய காவலர் ஏ.கந்தசாமி, சங்கத்தின் திருச்சி மாவட்ட அவைத்தலைவர் லயன் முனைவர் பி.ஏ.கணேசன் (டி.எஸ்.பி. ஓய்வு) உள்ளிட்டோர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், காவல்துறை ஓய்வூதியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் இராம.மனோகரன், ஏபிஎன் குழுமம் லயன் கே.சுதாகர், கண்ணன் ஜவுளி ஸ்டோர்ஸ் என்.செல்வகுமார், சின்னையன் ஸ்டேஷனரிஸ் ஆர்.சி.செங்குட்டுவன், விஸ்வா ரெசிடென்சி ஜெமீன் ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர்சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து கூட்டத்தில்,மாவட்ட சங்கத்திற்கு, அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு, இடம் கேட்டு, அரியலூர் மாவட்ட கலெக்டரை சங்கத்தின் நிர்வாகிகள் அணுகி உரிய தீர்வு காண்பது , ஆயுதப்படை பயிற்சிபள்ளிக்கூட்டரங்கில் இனிவரும் காலங்களில் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்தல்,சங்க உறுப்பினர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூபாய் 5000 சங்க நிதியில் இருந்து வழங்க ஒப்புதல்,சங்கத்தின் மறைந்த உறுப்பினர்கள் அன்பழகன், திருநாவுக்கரசு குணசேகரன் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ஆர்.நல்லசங்கி, மாவட்டச் செயலாளர் ஏ.கே.ஜெயராமன், சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் எம்.பெரியசாமி, மாவட்டப் பொருளாளர் இரவிக்குமார், மாநில ஊடகப் பிரிவு நிர்வாகி என்.ராமசாமி, சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்.ராஜகோபாலன், வீ.மதிவாணன், டி.ராமதாஸ், ஆர்.தர்மன், எஸ்.தர்மலிங்கம், எஸ்.பன்னீர்செல்வம், எஸ்.சோமு, எஸ்.தங்கசாமி, பி.வளையாபதி, ஆர்.மனோகரன், கே.அன்பழகன், பி.செல்லமுத்து, கே.சாகுல் ஹமீத், பி.சாமிதுரை, கே.செல்வகுமார், கே.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் சங்கத்தின் துணைச் செயலாளர் ஏ.ரங்கநாதன், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

<b> Total Views: 18 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *