இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழக முதல்வரிடம் வைத்த கோரிக்கைகளுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் வரவேற்பு!

நாகப்பட்டினம்

இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பாக, முனீருல் மில்லத் பேராசிரியர் கே. காதர் மொகிதீன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்துள்ள 12 முக்கிய கோரிக்கைகளையும் நாகூர் தர்கா நிர்வாகம் மனமார வரவேற்கிறது என
நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் மற்றும் ஆலோசனைக் குழுத் தலைவருமான செய்யது முகம்மது கலீஃபா சாஹிப் நன்றி கடிதம் எழுதியுள்ளார், அது சம்பந்தமான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.

முஸ்லிம் சமுதாயத்தின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பாக, முனீருல் மில்லத் பேராசிரியர் கே. காதர் மொகிதீன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்துள்ள 12 முக்கிய கோரிக்கைகளையும் நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக மனமார வரவேற்கின்றோம்.

வக்பு மற்றும் மத நிறுவனங்களின் பாதுகாப்பு, பள்ளிவாசல்கள் மற்றும் கபரஸ்தான்களுக்கு பட்டா, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, வக்பு தீர்ப்பாயங்கள், கபரஸ்தான்களுக்கு இடம், சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

சமுதாயத்தின் நியாயமான இக்கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என நாகூர் தர்கா நிர்வாகம் அன்புடன் வலியுறுத்துகிறது. இது ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பல வருட எதிர்பார்ப்பாக இருக்கிறது இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கின்றோம், சரியான தருணத்தில் இதனை எத்தி வைத்த பேராசிரியர் அவர்களுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *