
செய்தியாளர் :வசந்த்
சுமார் 100 குடும்பங்களுக்கு பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி தீர்மானம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் கனவுத் திட்டமான ‘வேர்களைத் தேடி (மக்களைத் தேடி)’ நிகழ்ச்சி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 36 எறையூர் காமராஜர் நகரில் பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட
மாநிலச் செயலாளர்கள் வீர செங்கோலன், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் செவ்வாம்பாள் மாவட்டப் பொருளாளர் பிச்சை பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர்
மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் பேசுகையில் இப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் விரைவாக அடிப்படை வசதி செய்து கொடுத்து நீண்ட வருடங்களாக போராடிவரும் பட்டா சம்மந்தப்பட்டமான பிரச்சனையையும் எழுச்சித்தமிழர் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

எறையூர் காமராஜர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. காமராஜர் நகரில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. காமராஜர் நகரில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
3. அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.
4. பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்படும்.
மேலும், இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைச் செயலாளர் (தேர்தல் பிரிவு) பழனிவேல் ராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் இடி முழக்கம்
நரிக்குறவர்முகாம் செயலாளர் விஜயன்,
ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கூத்தப்பன். மற்றும் குருவிக்காரர்கள் நரிக்குறவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
