
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் சவாரிக்கு வந்த திருச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் நவீன் மீது உள்ளூர் ஓட்டுநர்கள் 5 பேர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
வேளாங்கண்ணியில் இருந்து திருச்சிக்கு சவாரி ஏற்றிச் சென்றபோது நவீனை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஓட்டுநர்கள் கார்களுடன் நாகைக்கு திரண்டனர்.

அவுரி திடலில் குவிந்த ஓட்டுநர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், வெளியூர் ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து எஸ்.பி. அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டம் காரணமாக நாகை மாவட்ட எல்லைகளில் காலியாக வரும் வெளியூர் வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் நாகையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
