நிருபர் : சுபாஷ் செல்வம்
அரியலூர்: பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யின் 58-வது பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் கிழக்கு ஒன்றிய பாமக சார்பி ல் பல்வேறு கிராமங்களில் கட்சிக்கொடியேற்றி,மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முதலாவதாக, கோப்பிலியன் குடிக்காடு கிராம பேருந்து நிறுத்தம் அருகே பாமக கட்சிக் கொடியேற்றி பொது மக்களு க்கு இனிப்புகள் வழங்கப் பட்டன. தொடர்ந்து, கோப்பிலி யன்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 40 மாணவ-மாணவி களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கடுகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றநிகழ்ச்சியில்,அரியலூர் கிழக்கு ஒன்றிய பாமக சார்பில் அங்கு பயிலும் 70 மாணவ-மாணவிகளுக்கு எவர்சில்வர் தட்டு, வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் உசேனாபாத் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கு பயிலும் 25 மாணவ-மாணவிகளுக்கு எவர்சில்வர் தட்டு, வாட்டர் பாட்டில், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட் கள்வழங்கப்பட்டன.நிகழ்ச்சிகளுக்கு அரியலூர் கிழக்கு ஒன்றிய பாமக செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தன், வேல்முருகன், மாவட்ட துணை த் தலைவர் வெற்றிச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் சங்கர் குரு, செல்வ முருகன், தங்க செம்மலை, ஒன்றிய தலைவர் நல்லதம்பி, அரியலூர் தெற்கு ஒன்றிய மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன், உசேனாபாத் மதியழகன், மாவட்ட, ஒன்றிய, பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
