துறையூர் அருகே விளையாட்டு விபரீதமானது 13 வயது சிறுவன் உயிரிழப்பு – புலிவலம் போலீசார் விசாரணை

துறையூர்

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நல்லவன்னிப்பட்டி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் செல்வம் (13) கரட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மகன் பாரதி (15). இவர் நடுவலூர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய செல்வம் மற்றும் பாரதி ஆகியோர் அதே பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் வாலிபால் விளையாடி உள்ளதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கைகளில் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் செல்வத்திற்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தி இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். செல்வம் வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுவன் செல்வத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்து தூங்க வைத்துள்ளனர். ஆனால்சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் செல்வத்தை பெற்றோர்கள் துறையூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் செல்வம் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் டிஎஸ்பி கதிரவன் தலைமையில் புலிவலம் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்து போன சிறுவன் செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *