துறையூர் அருகே எரகுடியில் அம்மா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மைன்ஸ் எஸ். தங்கவேல் தலைமையிலிருந்து சுமார் 700 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விழாவில் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், துறையூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

மேலும் கடந்த தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகள் அளித்து வெற்றி பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில் எடபாடி கே. பழனிசாமி தலைமையிலான கழகம் மூன்று கட்டங்களாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளதாகவும் கூறினார். அதில்:

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்

அனைத்து மகளிருக்கும் ரூ.10,000 வழங்கப்படும்

மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்

முதியோர் உதவித்தொகையும் ரூ.2000 ஆக உயர்த்தப்படும்

என முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, முசிறி செல்வராஜ் உள்ளிட்டோர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

 

+

 

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *