
அரியலூர்ஒன்றியம்,வெங்கடரமணபுரம் கிராமத்தில், அரிய லூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் லதா பாலு வாக்கு சேகரிக்க வருகை தந்தார்.
அப்போது திமுகவினர்,கிராம பொதுமக்கள் பட்டாசு வெடித்து, அவருக்கு சால்வை அணி வித்து உற்சாக வரவேற்ப ளித்தனர்.தொடர்ந்து மாரியம் மன்கோவில் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயலாளர் அருங்கால் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் இரா.பாலு , வழக்கறிஞர் த.ஆ.கதிரவன், ஒன்றிய திமுக செயலாளர்கள் கோ.அறிவழகன், தெய்வ இளையராஜன் ,மதிமுக மாவட்ட செயலாளர் க. இராமநாதன், விசிக மாவட்ட செயலாளர்அங்கனூர் சிவா,தேமுதிக மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல், திமுக நிர்வாகிகள் பனங்கூர் ஜெயராமன், கல்யாண சுந்தரம்,காங்கிரஸ் நிர்வாகிகள் சுண்ட குடி தியாகராஜன், டி.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

