செந்துறையில் குன்னம் திமுக வேட்பாளரை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அண்ணா சிலை அருகே, குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சா.சி. சிவசங்கரை ஆதரித்து, கி. வீரமணி தலைமையில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.

பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் அரசு செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்களையும் கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் துரை துரை சக்கரவர்த்தி, செந்துறை ஒன்றிய திமுக செயலாளர்கள் வி. எழில்மாறன், பொன் செல்வம், மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜோசப் வின்சென்ட் ராஜா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் பேராசிரியர் அருள்,மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ஆதி இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் சிந்தனைச் செல்வன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் டி.கே. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *