பொய்யாதநல்லூரில் ஐஜெகே நிறுவன தலைவர் பாரிவேந்தர் தாமரை எஸ் ராஜேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

அரியலூர்

 

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட் பாளர் தாமரை எஸ் இராஜே ந்திரனை ஆதரித்து, அரியலூர் ஒன்றியம், பொய்யாத நல்லூரி ல் ஐஜெகே நிறுவன தலைவர் பாரிவேந்தர் வாக்கு சேகரித் தார். பொய்யாத நல்லூர் சிவன் கோவில் முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பரப்புரையின் போது, ஐஜெகே நிறுவன தலைவர் பாரி வேந்தர் பேசியதாவது,கடந்த முறை அரியலூர் சட்டமன்ற உறுப்பினராக தாமரை எஸ் இராஜேந்திரன் இருந்தபோது அரசுமருத்துவக்கல்லூரி,
கிராமப்புற சாலைகள் புதியதாக நிறுவியது மற்றும் மேம்படுத்தியது,அனைத்து கிராமங்களுக்கும் ,குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளார். எனவே மேலும் அரியலூர் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சி அடைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்பி இளவரசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் மா.தலைவர் எஸ் ஆர் எம் குமார், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் பொய்யூர் பாலசுப்பிர மணியம்,செல்வராசு,வடிவழகன்,சி சாமிநாதன்,பாஜக மாவட்ட தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி,பார்க்கவகுலம் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் பனங்கூர் கணேசன், மாவட்டத் தலைவர் யோகா கலியமூர்த்தி,ஐஜெகே மாவட்டத் தலைவர் வெற்றி செல்வன், மா.துணைத் தலைவர் அருள் கணேசன், ஐஜெகே நிர்வாகிகள் அழகு சங்கர்,பச்சையம்மாள்,மாலதி,கோவிந்தராஜ், வேணு கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *