கடன் தள்ளுபடியில் முதல்வர் விஜய் தனிக்கவனம் செலுத்த தவறி விட்டார் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்கசண்முகசுந்தரம்

அரியலூர்

கடன் தள்ளுபடியில் முதல்வர் விஜய் தனிக்கவனம் செலுத்த தவறி விட்டார் சட்டசபையை கூட்டி சிறப்புத் தீர்மானம் கொண்டு வாருங்கள் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வேண்டுகோள்

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டல் படி 45 நாள் முதல் 60 நாட்களுக்குள் தள்ளுபடி செய்த தொகையை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும் என கறுகிறது என தமிழக அரசு செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் கூட்டுறவு வங்கிகள் உள்ளது. தமிழக கூட்டுறவு வங்கி நிதி மேலாண்மை விடயங்களில் தலையிடும் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு தான் கூட்டுறவு வங்கிகளை சீர்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி வங்கியை வழிநடத்த ஆலோசனை வழங்கலாமே தவிர வங்கி முடங்கிவிட்டால் கூட்டுறவு வங்கியை தூக்கிப்பிடிக்க நிதி தந்து உதவும் அமைப்பு அன்று என்பதனை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். எனவே தமிழக அரசின் கொள்கை முடிவு நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய எடுக்கக்கூடிய முடிவுகளை தமிழக முதல்வர் விஜய் சட்டசபையை கூட்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட இந்திய சனாதிபதியோ மத்திய அரசு பிரதம அமைச்சர் நரேந்திர மோடியோ தலையிட முடியாது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது இலாபகரமான விலை கிடைக்கும் வரை தள்ளுபடியை கொடுத்தே ஆக வேண்டும். இந்திய நாட்டின் பிரதான தொழிலே விவசாயம் தான் இதனை காக்க கொடுக்கக் கூடிய மானியம் போல தான் தள்ளுபடியை கருத வேண்டும். ஏதோ விவசாயிகள் பெருஞ்செல்வந்தர்களாக வாழ்வது போல கற்பனை செய்து கொண்டு தலைமைச் செயலக அலுவலர்கள் கூறுவதனை கேட்டு முடிவெடுப்பதனை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே காமராஜர் ஆட்சிகாலம் முதலே அதிகாரிகள் எந்தவொரு நல்ல திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போட்டவர்களே எனவே அதிகாரிகளின் பேச்சினை அதிகளவில் செவிசாய்த்தீர்களானால் ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற இயலாது. எனவே தமிழக முதல்வர் மக்கள் நலனை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *